சுகாதார சீர்கேடு வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர்.?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா.?
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது, இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
குறிப்பாக இப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால், கொசு மருந்து அடிப்பது, ப்ளீச்சிங் பவுடர் போடுவது போன்ற எந்த ஒரு சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனால் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES கடலூர்
