BREAKING NEWS

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் 265வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் 265வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் தலைமை நிலைய செயலாளர் எஸ். வி. எஸ். பி. மாணிக்கராஜா கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து, விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார், திருநெல்வேலி மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரமசிவம், திருநெல்வேலி மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இசக்கிமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முருகையா பாண்டியன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )