சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை அறிவித்திருந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது,
குறிப்பாக பூந்தமல்லி அதிகபட்சமாக 10 cm மழை பதிவான நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது
சுமார் 3 மணி நேரம் நீடித்த மழையினால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்
கடந்த ஒரு மாத காலமாக மக்களை கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்