சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது

சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளியின் 85வது ஆண்டு விழா மற்றும் ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 40 வந்து ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது.
முதல் நாள் நடைபெற்ற ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளி நிறுவனர் ஜெமிமா அழகு சுந்தரம் 110 வது பிறந்த தின விழா மற்றும் பள்ளியின் 85வது ஆண்டு விழாவிற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார் புதுச்சுரண்டை டிடிடிஏ பள்ளி நிர்வாகி அருள்திரு ஜெகன் ஜெபித்து துவக்கி வைத்தார் பள்ளி நிர்வாகி ஏ. ஜேபஸ் பொன்னையா வரவேற்றார்
தலைமையாசிரியர் பிரிஸ்கில்லா பொடி மெனிக்கா ஆண்டறிக்கை வாசித்தார் தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார் தொடக்க கல்வி அலுவலர்கள் வெர்ஜினாள் மற்றும் கிருஷ்ணபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
இரண்டாம் நாள் நடைபெற்ற ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 40 வந்து ஆண்டு விழா சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தலைமை வகித்தார் அருள்திரு ஜெகன் ஜெபித்து துவக்கி வைத்தார் நிர்வாகி ஜேபஸ் பொன்னையா வரவேற்றார் தலைமையாசிரியர் தங்கமாரி ஆண்டறிக்கை வாசித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பேசினார் நகராட்சி துணை சேர்மன் சங்கரா தேவி முருகேசன் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பள்ளிக்குழு தலைவர் செல்வராணி ஜேபஸ், உறுப்பினர் ஷேங்கி பரஞ்சோதி மண்டேலா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன