சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் விழுப்புரம் வனத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், உசுடு பறவைகள் சரணாலயம் மற்றும் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது.
விழுப்புரம் & திண்டிவணம் வனச்சரகர்கள் முகாமை தொடங்கி வைத்தனர் பின் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் வெப்ப மண்டல உலர் பசுமை மாறா காடுகளை பற்றி சத்திய மூர்த்தி விளக்கம் அளித்தார். மேலும் பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றி சரவண குமார் எடுத்து உரைத்தார். முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ், பரிசுகள், வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
CATEGORIES விழுப்புரம்
TAGS அரசு பள்ளி மாணவர்கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்பறவைகள் சரணாலயம்விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்விழுப்புரம் வனத்துறை