BREAKING NEWS

சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு.

சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு.

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றி விட்டு கடந்த 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி கும்பகோணம் வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கி இருந்து சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார்.

எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள் லட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து பணியாற்றுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

 

சுவாமி விவேகானந்தரின் கும்பகோணம் விஜய விழா மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. ரயில்வே நிலையம், போர்ட்டர் டவுன்ஹாலில் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு நிகழ்ச்சிகளும், தொடர்ந்து சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம் கராத்தே உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.

 

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி கணித மேதை ராமானுஜம் அரங்கத்தில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்களின் விவேகானந்தர் ஓவியத் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற 101 மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

 

அதில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 19 மாணவ மாணவியருக்கு தலா ரூபாய் 2000 மற்றும் சான்றிதழ், சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.
கராத்தே, சிலம்பாட்டத்தில் சிறப்பாக சாகசம் செய்து காட்டிய 47 மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பரிசுகளை வழங்கி பேசுகையில்,

ஒவ்வொருவருக்கும் எல்லா ஆற்றல்களும் உள்ளன. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம். முதலில் நம்மிடமும், இறைவனிடமும் நம்பிக்கை கொண்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி.

 

மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் உழைக்க இளைஞர்கள் தங்களை மனதளவிலும் செயல் வடிவிலும் தயார்படுத்திக் கொள்வது அவசியம். மகத்தான காரியங்களை சாதிக்க வல்லவர்களாக நாம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஸ்ரீமத் மாத்ருசேவானந்தர், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS