சூதாட்டத்திற்கு தடை விதித்தது போல் ஆன் லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி .

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சாவூரில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்து வணிகர்களுக்கு வழங்க வேண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருளுக்கும் ஏற்றம் இல்லாமல் வரி விதிப்பு இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும்,
சொத்து வரி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது அதைக் குறைப்பதற்கு முதல்வரிடம் மனு அளித்துள்ளதாகவும் அதேபோல் செஸ் வரி உயர்ந்துள்ளது அதனையும் குறைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் மேலும் சூதாட்டத்தை தடை செய்தது போல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் இக்கூட்டத்தில் நிர்வாகிகள் வணிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்