செங்கத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் பழமைவாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று புதிதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒன்று சேர்ந்து உற்சாகமாக வரவேற்றனர்,
சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு தேர்வு எழுதி விடுமுறை அளிக்கப் பட்ட பின்னர் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவர்களை மேளதாளத்துடன் பள்ளி நிர்வாகம் சிறப்பாக வரவேற்று மாணவர்களுக்கு புத்துணர்ச்சியும் புதிய உத்வேகத்தையும் அளித்தனர்,
இதனைத் தொடர்ந்து மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி துவக்கி வைத்த ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பள்ளிக்கு சீருடை மற்றும் சிகை அலங்காரம் செய்து தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து பள்ளிக்கு வருமாறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என கூறினர், இந்த நிகழ்ச்சியால் மாணவர்கள் நிகழ்ச்சி அடைந்து மகிழ்ச்சியுடன் பள்ளி வகுப்பறைக்கு சென்றனர்.