செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்குவதை ஒட்டி காலை 9 மணி முதலே குடும்பத் தலைவிகள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில்,
காலை 10 மணி அளவில் செங்கம் சுற்று வட்டாரத்தில் உள்ள 167 நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை நியாய விலை கடைகளில் குடும்பத் தலைவிகள் மற்றும் முதியவர்கள் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த குடும்பத் தலைவிகள் நியாய விலை கடை விற்பனையாளரிடம் சிலர் வாக்குவாதத்தை ஈடுபட்டனர்.
உடனடியாக தமிழக அரசு விரைந்து செயல்பட்டு மாற்று நடவடிக்கை எடுத்து பொங்கல் தொகுப்பினை விரைவாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.