செங்கத்தில் முதல் முறையாக கொடியேற்றம் இல்லாமல் துவங்கிய கருடசேவை திருவிழா பக்தர்கள் வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம் ,
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா தொற்று அதிகரித்து வந்ததால் ஆலயங்களில் வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்து இருந்த நிலையில் தற்போது ஆலயங்களில் திருவிழா நடத்தலாம் கூறிய பின்னரும் கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி ஆலய கோபுரத்தின் மீது இடி விழுந்து இதுவரை புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தாததால் இந்த ஆண்டு நடைபெறும் கருடசேவை 10 நாட்கள் திருவிழாக்களும் உற்சவர் மாடவீதியில் செல்லாமல் ஆலயத்தை மட்டும் சுத்தி எடுத்துச் சென்று மீண்டும் ஆலயத்திலேயே வைக்கப்படும் என அறநிலை துறை சார்பில் கூறப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் கோபுரத்தை விரைந்து சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய வேண்டும் என தமிழக அறநிலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.