BREAKING NEWS

செங்கத்தில் வனசரக அலுவலக கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பணியாற்றும் வனசரக ஊழியர்கள்.

செங்கத்தில் வனசரக அலுவலக கட்டிடம் இடிந்து விழும்  ஆபத்தான   நிலையில் பணியாற்றும் வனசரக ஊழியர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வனசரக அலுவலகம் கடந்த 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ளது இந்த அலுவலகத்தில் ஒரு வனசரகர் இரண்டு வனக்காப்பாளர் பணியாற்றி வருகின்றனர்.

அலுவலக மேல் தளம் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலை ஊழியர்கள் பணியாற்றி வருவதால் மேல்தளம் இடிந்து விழுந்து உயிர் சேதமோ காயங்களோ ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் வனச்சரக அலுவலகம் கட்டிடத்தை ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தரப் பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )