செங்கம் அருகே அரசு ஊழியர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான அண்ணாமலை மகன் ரஞ்சித் என்பவரிடம் 80சென்ட் நிலத்தை கிரையமாக பேசி முன்பணம் 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு கார்த்திகேயன் வேலைக்காக சென்னை சென்றிந்த போது ரஞ்சித் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு நிலத்தை விற்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்திகேயன் தனக்கு நிலத்தை கொடுப்பதாக கூறி முன்பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதால் மனம் உடைந்த கார்த்திகேயன் வீட்டின் அருகே உள்ள தனியார் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் அப்போது அருகில் உள்ளவர்கள் புதுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
விறைந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பாளையம் காவல்துறையினர் செல்போன் டவர் மீது இருந்த கார்த்திகேயனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு செல்போன் டவர் மீது ஏறியிருந்த கார்த்திகேயனை பத்திரமாக மீட்டனர் தனிப்பட்ட நிலம் பிரச்சனைக்காக அரசு ஊழியர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது பின்னர் கார்த்திகேயனை புதுப்பாளையம் காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.