செங்கம் அருகே காளியம்மனுக்கு 1008 பால் குட அபிஷேகம் செய்த கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது.
பௌர்ணமி தினமான இன்று எட்டாவது திருவிழாவை சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஸ்ரீ காளி அம்மனுக்கு 1008 பால்குடம் எடுத்தும் சிலர் காளி வேஷம் அணிந்து வீதி உலா வந்து ஸ்ரீ காளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்வதால் தங்கள் பகுதியில் மழை பெய்து முப்போகம் விவசாயம் செய்யவும் கிராம மக்கள் நோய் தொற்று இல்லாமல் வாழவும் தங்கள் வீட்டில் உள்ள பில்லி சூனியங்கள் அகல ஸ்ரீகாளியம்மன் அருள் புரிவார் என அப்பகுதி கிராம மக்கள் 1008 பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் ஒன்பதாவது நாள் திருவிழாவான நாளை ஸ்ரீகாளியம்மனை வேண்டி கிராம மக்கள் கெடா வெட்டி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.