செங்கம் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த மயான பாதையை மீட்டு தர கோரி கிராம சாலையில் அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி பகுதியில் கிராம மக்கள் இறந்தவருக்கு இறுதிசடங்கு செய்ய செல்லும் மயான பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனக்கு சொந்தமான இடம் என கூறி பொதுமக்கள் செல்ல தடை செய்துள்ளார்.
இது குறித்து பலமுறை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அரசங்கண்ணி கிராம மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிராம சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மயானத்துக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தருவதாக உறுதியளித்து அளவீடு செய்ய துவங்கிய பின்னர் கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.