BREAKING NEWS

செங்கம் அருகே திமுக கொடி கம்பத்தை திருடிச் சென்ற அதிமுக முக்கிய பிரமுகர் மீது காவல்துறையில் புகார்.

செங்கம் அருகே திமுக கொடி கம்பத்தை திருடிச் சென்ற அதிமுக முக்கிய பிரமுகர் மீது காவல்துறையில் புகார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டபகுதியில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தை முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காமராஜ் இடித்து தள்ளியதாக அவர்மீது காவல்துறையிடம் புகார் அளித்து அவரை கைது செய்து 45 நாட்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கலைஞரின் 99வது பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட வேண்டும் என ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திமுக கொடி கம்பத்தில் திருடிச் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து அதிமுக முக்கிய பிரமுகர் மீது செங்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )