செங்கம் அருகே மாநிலங்கள் அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடியில் டாக்டர் BR.அம்பேத்கார் கபடி குழுவினர் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில் திருப்பூர் ஒசூர் நெய்வேலி கிருஷ்ணகிரி வேலூர் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
அதில் சிறப்பாக விளையாடிய ஒசூர் அணியும் திருப்பூர் அணியும் இறுதி ஆட்டத்தில் மோதியது இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
CATEGORIES திருப்பூர்