செங்கம் அருகே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட காணொளி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் அங்கு குறைந்த வகுப்பறை உள்ளதாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த நிலையில்,..
அதன் அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாடு முழுதும் பல்வேறு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிட கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதனை முதலமைச்சர் காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அந்தந்த பகுதியைச் சார்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பூமி பூஜை போடப்பட்ட நிலையில் செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் பகுதியில் 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.