செங்கம் அருகே 3 மாதத்துக்கு மேலாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையின் குறுக்கே கயிரை கட்டி நூதன முறையில் பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு 3 மாதத்திற்க்கும் மேலாகியும் இது வரை குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை டு பெங்களூர் நெடுஞ்சாலையின் நடுவே கயிறை கட்டி நூதன முறையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
CATEGORIES திருவண்ணாமலை