செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர்.

திருவண்ணாமலை, செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி தட்டணை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊழல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆய்வாளர் மலர் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் வனப்பகுதியில் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட போது,
அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு எட்டுக்கும் மேற்பட்ட இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெரல்களில் இருந்த சுமார் 5000 லிட்டர் சாராய ஊழல்களை தரையில் கொட்டி அழித்து பின்னர்.
இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வனப்பகுதியில் சாராய ஊழலை வைத்த மர்ம நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.