செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறைதீரு கூட்டம் ஆணையாளர் எழிலரசு, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த மாற்றுத்திறனாளிகள் குறைவு கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் இனிவரும் மாதங்கள் தோறும் மாதத்தில் முதல் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அலுவலக தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுமென தெரிவித்து பேசினார்கள்.
இதனை தொடர்ந்து சுற்றுப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளை செய்து தரக்கோரி கோரிக்கை மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் வழங்கினார்கள்.