செங்கல்பட்டில் தனியார் பேருந்து மோதி 72 வயது மூதாட்டி பலி.
செஙகை ஷங்கர். செங்கல்பட்டு.
செங்கல்பட்டு அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சாலாட்சி (72) இவர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் உயிரிழந்த அஞ்சாலாட்சியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மேகநாதன் (40) பேருந்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை கைபற்றிய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES செங்கல்பட்டு
TAGS குற்றம்செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பேருந்து மோதி 72 வயது மூதாட்டி பலிவெங்கடாபுரம்