BREAKING NEWS

செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.

செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.

செய்தியாளர் செங்கைஷங்கர்.

தமிழகம் முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளை தூய்மைபடுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

 

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்புகளை சுற்றி புதர்மண்டி கிடப்பதை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காப்பாளர் பிரதீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு காவலர்களின் உதவியுடன் முட்புதர்களை அகற்றி தூய்மை படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

 

பல ஆண்டுகளாக காவலர் குடியிருப்பு புதர் மண்டி கிடந்ததால் பாம்பு பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்து வந்தன.
அதிலும் மழை நேரங்களில் குடியிருப்புக்கு உள்ளேயே நுழைந்து விடுவதால்
காவலர்கள் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்க்கு ஆளாகி வந்தனர்.

 

தற்போது செங்கல்பட்டு காவலர்கள் குடியிருப்பில் 100 காவலர்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.இந்த காவலர் குடியிருப்பில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தூய்மை படுத்தப்பட்டது. காவலர்கள் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS