செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.
மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பழக்கவழக்கங்களுக்கு இன்றைய இளைஞர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர்.
போதை பொருட்களை விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது மாவட்டத்தில் போதை பொருட்களை குறைக்க வேண்டும் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியம் தேவை.
அதிலும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் மிக முக்கியமான பங்கு ஆகும். அதனால் உங்களது வாகனத்தில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்கள்,
கஞ்சாமற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்து செல்வது தெரிந்தாலோ அல்லது சந்தேகப்படும் படியான நபர்கள் தங்களது ஆட்டோவில் பயணித்தாலோ உடனடியாக காவல்துறை ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரிடம் அச்சமின்றி துணிச்சலாக தகவல் கொடுக்க முன்வர வேண்டும்.
இதில் உங்களது வாழ்க்கையும் அடங்தியுள்ளது ஏனென்றால் இதுபோன்ற போதை பொருட்களை உங்களுக்கே தெரியாமல் எடுத்து செல்லும்போது அவர்கள் காவல்துறையில் சிக்கினால் உங்களது ஆட்டோ மற்றும் நீங்களும் சிக்குவீர்கள்..
நீங்கள் வெளியில் வந்தாலும் ஆட்டோ வழக்கில் சிக்கக்கூடும் அதனால் முக்கியமாக கஞ்சா போன்ற போதை பொருட்களை நீங்கள் உபயோகிக்க கூடாது மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டக்கூடாது.
போதை பொருட்களை தடுக்க நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களது தகவல் இரகசியம் காக்கப்படும்.
மேலும் தகவல் கொடுக்கப்படும் நபருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவதாக தமிழக டிஜிபி அறிவித்துள்ளதாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ப்ரதீப் ஐபிஎஸ் ஆட்டோ ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார்.
இந்நிகழ்வின் போது துணை காவல் கண்காணிப்பாளர் பரத், காவல் ஆய்வாளர் வடிவேல்முருகன், உதவி ஆய்வாளர் டில்லிபாபு மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.