செங்கல்பட்டில் ஶ்ரீரத்தின வினாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு.
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு அண்ணா நகர் ஸ்ரீ ரத்தின வினாயகர் ஆலயத்தில் வினாயகர் ,
பெருமாள், சக்கரத்தாஷ்வார், ஐயப்பன் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர்.
இங்கு அனைத்து விஷேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெறும்.
குறிப்பாக சூரசம்ஹார விழா மிக சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
அதேபோல் ஹனுமன் ஜெயந்தி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்றிரவு ஶ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இவ் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனின் ஆசியையும் அருளையும் பெற்று மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து மஹாப்ரசாதம் வழங்கப்பட்டது.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்ஸ்ரீ ரத்தின வினாயகர் ஆலயம்ஹனுமன் ஜெயந்தி