செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…
செய்தியாளர் செங்கைஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் அமைந்துள்ள ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் போல தத்ரூபமாக சினிமா பாணியில் செட் வடிவமைத்து பள்ளியின் முதல்வர் மாலதி ஜெயபிரகாஷ் தலைமையில் கிருஸ்துமஸ் விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கிழக்கு கடற்கரைசாலை பங்குதந்தை லாரன்ஸ் மற்றும் பள்ளியின் தாளளர் அனிஸ்டா கோம்ஸ் மற்றும் ஆனந்திபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 180 கிலோ எடையுள்ள கேக் வெட்டி சாதிமத பேதமின்றி அனைத்து மாணவிகளோடும் கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
கிருஸ்துமஸ் மேலும் கிருஸ்துமஸ் பண்டிகையை பற்றியும் ஏசு கிருஸ்துவின் பிறப்பு மற்றும் அவரது மகிமைகள் குறித்து எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாணவ மாணிவிகள், பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இறுதியாக பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம், மற்றும் மழலை மாணவ மாணவிகள் கிருஸ்தவ பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர். மேலும் கிருஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு அனைவைரையும் மகிழ்வித்தனர்.
அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.