செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலை/ மயிலை ஒன்றிய பகுதியில் சுமார் 50 கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது.
இந்த செங்கல் காளவாசல் உரிமையாளர்களிடம் மயிலாடும் பாறை வருவாய் ஆய்வாளர்
உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதாக கூறி மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறி பகுதி சேர்ந்த செங்கல் காளவாசல் உரிமையாளர்கள் இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் சிவசேனா கட்சி சார்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர்
மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட கோரிக்கை மனுவினை தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
CATEGORIES தேனி