செங்கோட்டையில் அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

தென்காசி, அதிமுக தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்து இன்று 51 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி ஆலோசனையின் பேரில், நகர அதிமுக சார்பில் 51 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நகர அவைத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கி, முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருவுருப்படத்துக்கு மலர் தூவி, அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கணேசன், நகரத்துணைச்செயலாளா் பூசைராஜ், நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், முத்துப்பாண்டி,
முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் கனியத்தா, சுந்தரம், செந்தில்ஆறுமுகம், இராஜகோபாலன், நகர எம்ஜீஆர் மன்ற இளைஞரணி செயலாளா் சக்திவேல், மாவட்ட எம்ஜீஆர் மன்ற துணைச்செயலாளா் ஜாகீர்உசேன் மாவட்ட பிரதிநிதிகள் லட்சுமணன், மீன்ஆறுமுகம், ஹரிஹரன்.
அண்ணா தொழிற்சங்க மண்டலச்செயலாளா் இராமையா பணிமனை தலைவா் முத்தராமன், செயலாளா் மோகன், பொருளாளா் கருத்தப்பாண்டி, முன்னாள் செயலாளா் மாரிச்செல்வம், உறுப்பினா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.