செங்கோட்டையில் நலவாரிய உறுப்பினர்கள் 35 பேருக்கு நிதிஉதவி ஆணைகள்: கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வழங்கினார்!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஜெயம் பொதுத்தொழிலாளா்கள் நலச்சங்க உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தின் நிதிஉதவி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கிருஷ்ணமுரளி 35 பேருக்கு திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை, ஓய்வூதிய நிதி உதவி, இறப்பு நிதி உதவி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஜெயம் பொது தொழிலாளா்கள் நலச்சங்க தலைவா் சேகர் செய்திருந்தார்.
CATEGORIES தென்காசி
TAGS அதிமுகஅரசியல்கடையநல்லூர்சுந்தரேசபுரம் கிராமம்ஜெயம் பொதுத்தொழிலாளா்கள் நலச்சங்கம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்