செங்கோட்டை அருகே பிரானூர் தீப்பாச்சி அம்மன் கோவில் கொடை விழா பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானூர், பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு கொடை விழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 10ம் திருநாளில் தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் தீப்பாச்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து மாலையில் பறவைகாவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டாற்று பாலம் அருகே விரதம் இருந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர்.
பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்கிட, பக்தர் ஒருவர், தனது உடலில் அலகு குத்தி பறவைக் காவடி எடுத்தார். பறைவகாவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வலம் வந்து தீப்பாச்சியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.
திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டை, பிரானூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.