செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
செந்துறை அருகே மணப்பத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மனப்புத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி நடைபெற்றது இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும் இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி மற்றும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு முன்னதாகவே காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் அந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக ஸ்ரீ திரௌபதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர் ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டு பக்தர்களுக்கு பம்பை உடுக்கை முழக்கத்துடன் சக்தி அழைத்து பூங்கரகம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து திரௌபதி அம்மன் கோயில் அருகே 23 அடியில் நீளத்தில் மூட்டப்பட்டிருந்த தீயில் அனைத்து பக்தர்களும் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இதில் திரௌபதி அம்மன் வரத்தில் பெற்ற குழந்தைகளை சிலர் கையில் ஏந்தி கொண்டு தீ மிதித்தனார்.
அதேபோல் பிறந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் இல்லாமல் இருப்பதற்காக சில பக்தர்கள் தங்களது குழந்தைகளை கையில் ஏந்தியவாறு என தீ மிதித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார் இதில் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனின் அருள் ஆசியை பெற்று சென்றனர்.
செய்தியாளர் வேல்முருகன் .