சென்னையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் : தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகத்தில் மண்டல, மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் எல்.கே சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுபா செந்தில்குமார், தேர்தல் பணி செயலாளர் தாமோதரன், தென்மண்டல அமைப்பாளர் சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சோலை வி.கனகராஜ், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்ஐசி குருவையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
TAGS அரசியல்சென்னைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேசிய முற்போக்கு திராவிட கழகம்தேமுதிகபிரேமலதா விஜயகாந்த்மாவட்ட செய்திகள்