BREAKING NEWS

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த நிலையில் உள்ளது? – தலைமைச்செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த நிலையில் உள்ளது? – தலைமைச்செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

 

அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை நகரம் மற்றும் சென்னையின் புறநகரில் உள்ள 9 பகுதிகளில் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று ஆய்வு செய்கிறார்.

 

பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், மேலவாக்கம், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலைகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

 

சென்னை நகர் முழுவதும் 2079 கிலோமீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த சூழலில் கடந்த மூன்று வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தலைமைச்செயலாளர் இறையன்பு இந்த பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

 

பள்ளிக்கரணையில் ரூ.57 கோடியில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அவருடன் சென்னை மாநகரட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

 

இந்த ஆய்வுப்பணியின் போது வரிசையாக அதிகாரிகளின் வாகனங்கள் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டதால் பள்ளிக்கரணை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )