சென்னையில் மாயமான வாலிபர் உடுமலை போலீசில் தாய் புகார்.

சென்னையில் மாயமான தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு தாய் உடுமலை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது’உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகநாதன் திலகவதி தம்பதியர்.
இவர்களுக்கு அரவிந்த் (வயது 21) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டேட்டா ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி உடுமலையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த அரவிந்த் 7ம் தேதி ரயில் மூலம் சென்னைக்கு சென்றுள்ளார்.பின்னர் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கியதும் பெற்றோருக்கு போன் செய்து தான் சென்னை வந்து சேர்ந்து விட்ட தகவலை தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவருடைய போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.மேலும் வேலை செய்த நிறுவனத்துக்கு அவர் சென்று சேராததால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரித்தும் அவரை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சென்னைக்கு வேலைக்கு சென்ற மகன் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த தாய் திலகவதி உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் தலைமையிலான தனிப்படை அமைத்து காணாமல் போன அரவிந்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
