சென்னை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.
சென்னை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.
இந்த வாகனங்கள் ஹாரிங்டன் சாலை சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் மெக்னிக்கல் சாலையில் திரும்பி குருசாமி பாலம் கீழாக சர்வீஸ் சாலையில் சென்று, பின்னர் வலதுபுறம் மெக்னிக்கல் சாலையில் திரும்பி செல்ல வேண்டும். மே 22 நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
அதே போல கீழ்ப்பாக்கம் தாசப்பிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை, அழகப்பா சாலையில் ஈ.வே .ரா சாலை சந்திப்பு முதல், ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல், பகல் 11 மணி வரை இது அமல்படுத்தப்படும். நாளை முதல் கே .கே .நகர் கா சி பாயிண்ட் சந்திப்பு பகுதியிலும் 10 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.