BREAKING NEWS

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாதி!! தட்டி தூக்கிய காவல்துறை!!

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாதி!! தட்டி தூக்கிய காவல்துறை!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் (26) மீது பஞ்சாப் மாநில போலீஸ் கடந்த 2020-ம் ஆண்டு தேசத்துரோக மற்றும் தீவிரவாத குற்றச் செயல் 127ஏ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த ஹர்ப்ரீத் சிங்கை போலீசார் தேடிவந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து பஞ்சாப் மாநில போலீஸ், ஹா்ப்ரீத்சிங்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவா் மீது லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டிருந்தது.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னை சா்வதேச விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அவர் கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹர்ப்ரீத் சிங் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து தனியறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக பஞ்சாப் போலீசார் சென்னைக்கு வர இருக்கின்றனர்.கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஒருவர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )