செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருவிடைகழி, நெடுவாசல், ஈச்சங்குடி- கடலி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக் தலைமை வகித்தார்.
திருவிடைகழி கடைவீதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி கே.பி.ராஜா, நெடுவாசல் நடைபெற்ற கூட்டத்திற்கு கிளைக் கழக செயலாளர் ஜான்வில்லியம், ஈச்சங்குடி ஊராட்சி கடலி கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி இளங்கோவன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு சாதனைகளைப்பற்றி பேசினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் மு. ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள்செல்வன், எம்.எம்.சித்திக், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கபிலன், அவைத்தலைவர் மனோகரன், தரங்கை பேரு கழக செயலாளர் முத்துராஜா,
வழக்கறிஞர் அருள்தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாராணி தனபால், புஷ்பமேரி உதயகுமார், ரெங்கராஜ், உதயகுமார், ஒன்றிய பிரதிநிதி பாலமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.