BREAKING NEWS

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரேநாளில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல்:- அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,777-க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரேநாளில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல்:- அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,777-க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டாவது வாரமாக பருத்தி மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,777-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,569-க்கும் சராசரியாக ரூ.7,000-க்கும் விலைபோனது. இன்று ஒரேநாளில் மொத்தமாக 3,500 குவிண்டால் பருத்தி ரூ.2.50 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 925 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்கள் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து 25 வியாபாரிகள், மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.

நடப்பாண்டுக்கு டெல்டா மாவட்டங்களிலேயே செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS