BREAKING NEWS

செயினை பறித்து ஓடியவனை மடக்கி பிடித்த ரியல் ஹீரோ.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லட்சுமி புரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் மனைவி கோமளாதேவி (28). இவர் தனது 4 வயது மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து அழைத்துச் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென கோமளாதேவியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.

திருச்சி

தாலி செயினை பறிக்க விடாமல் கோமளாதேவி போராடிய நிலையில், கொள்ளையர்கள் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையில் குறுக்கே வண்டியை நிறுத்தினார். இதையடுத்து கொள்ளையர்கள் வண்டியின் பின்புற வழியாக தப்ப முயன்ற போது அவ்வழியாக வந்த செல்லையா என்ற ஆட்டோ டிரைவர், மறிக்க முயன்ற போது கொள்ளையர்கள் ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர்.

இதைக்கண்ட பொதுமக்கள் உடனே கொள்ளையர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொருவரை பிடித்து அவரின் கையை கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து மணப்பாறை போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாகை மாவட்டம், காடம்பாடியைபைச் சேர்ந்த விஜய் (28) என்பதும் தப்பியோடியவர் திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் வயது 28 என்பதும் தெரியவந்தது.இதையடுத்து தப்பியோடிய நவீனை போலிசார் தேடி வருவதோடு பிடிபட்ட கொள்ளையனிடம் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியையும் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயினை பறிக்கமுயன்ற போது நடந்த போராட்டத்தால் கோமளாதேவியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அங்கு ஓருகடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களை தப்ப விடாமல் சமயோசிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் செல்லையாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )