செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசி காவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசி காவினர் மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து பாராசூரில் கால்நடை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விசிக மாவட்ட செயலாளர் பகலவன் (எ) பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் குப்பன் முன்னிலை வகித்தார்.
விசிக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி பாராசூரில் கால்நடை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 14 குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ரன்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருவண்ணாமலை