செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.
செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு. கடை ஊழியருக்கும், போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே அம்மன் செல்போன் சர்வீஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் தனது மொபைலுக்கு டிஸ்ப்ளே உடைந்து விட்டதாகவும், அதனை மாற்றி தருமாறு கூறியுள்ளனர்.
அப்போது கடையில் இருந்த சர்வீஸ் பொறியாளர் ஹரி ராஜாளி என்பவர் டிஸ்ப்ளே மாற்ற 1800 ரூபாய் ஆகும் என. கூறியுள்ளனர் இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் ஒருவர் தகாத வார்த்தை கூறிக் கொண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு, கைகளப்பாக மாறி ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து கடை ஊழியர் ஹரி ராஜாளி தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.