செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விமலன் ஆயுர்வேதிக் மருந்துவிற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி (26)இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் இன்று மாலை 3 மணி அளவில் திருவெறும்பூர் பகவதிபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீ நிதியை அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய டாக்டர் ரஷ்யா தேவி பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணியில் இருந்த செவிலியர்கள் செண்பகவல்லி, லதா ஆகியோர் ஸ்ரீநிதிக்கு பிரசவம் பார்த்ததாகவும் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும் ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டதாக மாலை 6:30 மணிக்கு அதாவது 3 மணி நேரம் கழித்து சொன்னதாகவும்,

இதனால் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோரும் உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
