செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பாரதி இல்லத்திற்கு வருகை தந்த ஜோதியை அரசு அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.

சென்னை மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெறுவதை ஒட்டி தமிழக முழுவதும் ஒலிம்பியா ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் தொடர் ஓட்டமாக ஏந்தி வந்த ஜோதியை,
எட்டையாபுரம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலர் கணேசன் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி பேரூராட்சித் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஜோதியை வரவேற்றனர் மணிமண்டபத்திலிருந்து ஜோதி ஓட்டமாக புறப்பட்டு மெயின் பஜார் பாரதியார் இல்லம் ஆகிய வழியாக செஸ் ஒலிம்பியார் போட்டியின் குறித்து பொது மக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இச் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது.