BREAKING NEWS

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி.

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி.

 

சேலம்:

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் 3 நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உள்பட ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றி உள்ளனர்.

 

அப்போது வங்கி அருகே உள்ள மினி பஸ் பட்டறையில் பணியாற்றும் சிலர் வங்கியின் சுவரில் துளையிடப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளரிடம் தெரிவித்தனர்.

 

இது குறித்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது .

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )