சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்து. 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்.
ஆத்தூர் அருகே சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வேனில் வந்த 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கிருஷ்ணகிரி மாவட்டம் மாயனூரில் உள்ள தற்காவிற்கு (அல்லா கோவில்) உடல்நலம் குறைபாடு உள்ளவர்களை பாடம் போடுவதற்காகவும் சிகிச்சைக்காகவும் சென்று மீண்டும் வீடு திரும்பியபோது ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரம் என்ற இடத்தில் திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுநர் முஸ்தபாவின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த ஜாகீர், சையத் அஜீஸ்(65) ஜானிக் பாஷா (55) சாதிக் பாஷா (45) பதினம் (40) 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர் உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசாரும் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.