BREAKING NEWS

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வாக்கு வங்கியை அதிகரிக்க திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்..

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வாக்கு வங்கியை அதிகரிக்க திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்..

 

சேலம் வடக்கு மற்றும் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பாமக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரிலுள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

 

 

இக்கூட்டத்திற்கு, சேலம் வடக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் விஜயராஜா, கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் முருகேசன், பச்சமுத்து ஆகியோர் வரவேற்றனர். 

 

 

மகளிர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மணிமேகலை, கோகிலா, கண்ணகி, மேனகா, சந்தியா, மாலதி, சத்யப்பிரியா, தீபிகா, லட்சுமி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இக்கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய மாநில மகளிர் சங்கத் தலைவர் நிர்மலா ராஜா பேசுகையில், ‘தமிழகத்தில் ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும், வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஜனநாயகத்தை பாழ்படுத்தி வருகின்றனர். இதனால், நல்ல திட்டங்கள், வளர்ச்சியின்றி பாதிப்புக்குள்ளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

 

எனவே, பாமக நிர்வாகிகள், வீடு வீடாக சென்று பாமக வின் கொள்கை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அன்புமணியின் செயல்பாடு குறித்து எடுத்துரைத்து திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

 

வாக்கு வங்கியை அதிகரித்து எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி அன்புமணியை முதல்வராக்க பாடுபட வேண்டும். 

மதுக்கடைக்கு எதிரான போராட்டங்களில் பாமக மகளிர் ஆர்வத்தோடு பங்கேற்க்க வேண்டும்’ என்றார். 

 

 

இதனையடுத்து, எதிர்வரும் தேர்தலில் பாமகவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு, வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து பாமக வின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கான நலத் திட்டங்கள், அன்புமணியின் சிறப்பான செயல்பாடு குறித்து திண்ணைப் பிரச்சாரம் செய்வதென நிர்வாகிகள் உறுதியேற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )