சேலம் மாவட்டம் ஏற்காட்டில் துப்புரவு தொழிலாளியின் வீட்டின பூட்டு உடைத்து நகை பணம் கொள்ளை.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை பணம் திருடு போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சி.
சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி – வசந்தி தம்பதியினர்.
வசந்தி அதேபகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இன்று வழக்கம்போல் வசந்தி வேலைக்கு சென்றுள்ளார். அவரது கணவரும் வேலைக்கு சென்று உள்ளார்.
அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வசந்தியின் வீட்டின் கதவில் உள்ள பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிலுந்த 8பவுன் நகைகளையும், 5 ஆயிரம். ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களைகொண்டு கொள்ளையர்கள் விட்டுசென்ற தடயங்களை சேகரித்தனர்.
வசந்தி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனதால் மிகவும் வேதனைக்கு ஆளானார்.
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 8 பவுன் நகைகளை 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.