BREAKING NEWS

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 

இந்த போராட்டத்தின் போது, மனிதர்களை சாதியின் பெயரால் பிரிக்கும் சனாதன சக்திகளையும், மத வெறி கும்பலை கண்டித்தும், மனுதர்மத்தின் பெயரால் மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்யும் ஆதிக்க சக்திகளை கண்டித்தும் கோஷமிட்டனர். நிறைவாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பேளூர் நகர செயலாளர் வேல்முருகன் பேளூர் நகர செயலாளர் நன்றி கூறினார்.

 

 

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற, இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

 

மாவட்ட அமைப்பாளர் அறிவழகன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வாழப்பாடி ஷாகீர்உசேன், பேளூர் நவாஷ், திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் தி.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

இந்த போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர்கள் மாயக்கண்ணன், தர்மலிங்கம் மற்றும் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )