சோனியா காந்தியின் மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுவதை கண்டித்து தேனியில் சத்யகிரக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

தேனி: பழனிசெட்டி பட்டியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பாக டெல்லியில் அமலாக்கத்துறை அன்னை சோனியா காந்தியின் மீது விசாரணை நடத்துவதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சத்யகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் தேனி போடி ஆண்டிபட்டி கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை கண்டனங்களையும் எழுப்பினர்.
