BREAKING NEWS

சோழவந்தான் பேரூராட்சி யில் பேரூராட்சி தலைவர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

சோழவந்தான் பேரூராட்சி யில் பேரூராட்சி தலைவர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

 

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியின் வளமீட்பு பூங்காவில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி , மல்லாங்கிணறு, சுந்தரபாண்டியம் , மம்சாபுரம், சேத்தூர் , செட்டியார்பட்டி வத்திராயிருப்பு , வ.புதுப்பட்டி மற்றும் சா. கொடிக்குளம் பேரூராட்சிகளின் தலைவர்கள், செயல் அலுவலர்கள், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 

 

பயிற்சி பட்டறைக்கு மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திரு சேதுராமன் அவர்கள் தலைமை வகித்தார்.

 

மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர்மற்றும் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் திரு கா. ஜெயராமன் முன்னிலையில் அலங்காநல்லூர் , பாலமேடு, டி. கல்லுப்பட்டி, பேரையூர் , பரவை எழுமலை, பேரூராட்சி மன்ற தலைவர்கள் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழக அளவில் மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில் நான்கு பேரூராட்சிகள் மாதிரி பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு நான்கு பேரூராட்சிகளில் சோழவந்தான் பேரூராட்சி தென் தமிழக பகுதியில் பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

சோழவந்தான் பேரூராட்சியில் தினசரி வீடுகள் தோறும் கழிவுகள் தரம் பிரித்து சேகரித்தல், வணிக நிறுவனங்களில் சேகரித்தல் மற்றும் பொது இடங்களில் சேகரித்தல் போன்ற பணிகளை உரிய திட்டமிட்டு மற்ற பேரூராட்சிகளுக்கு முன்மாதிரியாக திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

 

மேலும் கழிவுகளில் இருந்து வளங்களை மீட்டெடுத்தல் இயற்கை உரம் மண்புழு உரம் தயாரித்தல் போன்றவற்றையும் சிறப்பாக செய்து வருவதால் இப்பேரூராட்சியின் பயிற்சி மையத்தில் உள்ளவாறு அனைவரும் மற்ற பேரூராட்சிகளில் செயல்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பயிற்சியினை சோழவந்தான் பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு.மு.சுதர்சன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் திரு ஆ. முருகானந்தம் வழங்கினர்.

 

மேற்படி பயிற்சி குறித்து இதர பேரூராட்சிகளில் இருந்து பயிற்சிக்கு வருகை தந்தவர்கள் திடக்கழிவுகளை சேகரிக்க நன்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் சோழவந்தான் பேரூராட்சியில் சிறப்பாக திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )