BREAKING NEWS

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பி கே ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்.

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ்  பி கே ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் தலைமையில் பி.கே.ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள சுமார் 45 மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்கள்.

 

மேலும் அரசு பள்ளியில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து மேலும் ஒரு அணியை உருவாக்க பி.கே. ஸ்போர்ட்ஸ் முன்வந்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.கே.ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் பாராட்டினார்கள்.

 

உடன் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் நகர மன்ற தலைவர் காவிய விக்டர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆதாம் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பெரியார்தாசன் பி.கே.ஸ்போர்ட்ஸ் மதன்குமார் சங்கர் சித்திக் பாண்டியன் தமிழ்ச்செல்வன் ராஜாராம் ராஜா முஸ்தபா பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பலர் உள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )